• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 - 2016 வௌிக்கள நிகழ்ச்சித்திட்டத்தின் பொருட்டு விசர்நாய்க்கடி நோய் தடுப்பூசி புட்டிகள் 450,000 கொள்வனவு செய்தல்
- விசர்நாய்கடி நோய் நூற்றுக்கு நூறு வீதம் மரணத்தைக் கொண்டுவருவதாக இருந்தாலும் இதனை தவிர்க்க கூடிய நோயொன்றாகும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளுக்கு அமைய விசர்நாய்க்கடி நோயினால் உலகம் முழுவதும் வருடாந்தம் சுமார் 55,000 பேர்கள் மரணிப்பதோடு, இத்தகைய மரணங்களில் 95 சதவீதத்திற்கு அதிகமானவைக்கு காரணமாய் அமைந்துள்ளது. விசர்நாய்கள் கடித்தமையினாலாகும். உலக சுகாதார அமைப்பிற்கு அமைவாக 70 சதவீதமான நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் மூன்று மாதங்கள் கொண்ட குறுகிய காலப்பகுதிக்குள் விசர்நாய்கடி நோயை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான சாத்தியமுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நாய்களினால் ஏற்படும் விசர்நாய்கடி நோயை இந்த நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதை குறியிலக்காகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக,. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக உயர் தரத்தினைக் கொண்ட விசர்நாய்கடி நோய்க்கான தடுப்பூசிகள் 450,000 ம் புட்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .