• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயாளர்களுக்கு விசேட சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான சிறுநீரகப் பிரிவினைத் தாபித்தல்
- காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் தற்போது சுகாதார துறை முகங்கொடுக்கும் பாரிய சவாலாக கருதப்படுகின்றது. தற்போது நாடுமுழுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 26,470 பேர்களாவதோடு, அநுராதபுரம், பொலன்நறுவை, குருநாகல், பதுளை, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை, முல்லைதீவு போன்ற மாவட்டங்களிலிருந்து பெருமளவிலான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நோய் நிலைமை பெருமளவில் காணப்படும் பிரதேசங்களில் நோயாளிகளை முன்கூட்டியே இனங்காணும் பணிகளுக்கு போதுமான வசதிகள், இரத்த சுத்திகரிப்பு வசதிகள், சிறுநீரக மாற்று சிகிச்சை வசதிகள் போன்றவற்றுடன் எதிர்வரும் 2016 - 2018 மூன்று வருட காலப்பகுதிக்குள் 4,263 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் பின்வரும் வைத்தியசாலைகளில் சிறுநீரக நோய் பிரிவுகளை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .

* போதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்;
* மாகாண பொது வைத்தியசாலை - பதுளை;
* போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு;
* மாவட்ட பொது வைத்தியசாலை - திருகோணமலை; அத்துடன்
* மாவட்ட பொது வைத்தியசாலை - அம்பாந்தோட்டை;