• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் தீவுப்பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி வடமாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இலகுபடுத்துவதற்கான விசேட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் குடாநாட்டிற்கு அண்மையிலுள்ள நெடுந்தீரவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைத்தீவு, மண்டைதீவு அடங்கலாக 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஆறு தீவுகளில் மக்கள் வசிப்பதோடு இதில் வசிக்கும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15,000 ஆகும். அவர்களுடைய பிரதான வாழ்வாதாரமாவது மீன்பிடித்தல், கமத்தொழில், பண்ணை மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள் போன்றவையாகும். தற்போதுள்ள வினைத்திறனற்ற போக்குவரத்து முறைகாரணமாக பிரதான நிலப்பகுதிக்கு பயணிப்பதற்கு அதிக காலமும் பணமும் அவரகளுக்கு செலவிட நேரிட்டுள்ளது. இதற்கமைவாக, வினைத்திறன் மிக்க போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் ஏதுவாய் அமையும் பத்து கருத்திட்டங்களை நடைமுறைபடுத்தும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .