• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1986 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க விலங்கு தீனிச் சட்டத்தைத் திருத்துதல்
- விலங்குத் தீனி சம்பந்தமாக சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு விலங்குத் தீனி பதிவாளரை நியமித்தல், விலங்குத் தீனி ஆலோசகர் குழுவின் கட்டமைப்பை மாற்றுதல், விலங்குத் தீனி கொள்வனவாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை மீறுதல் சம்பந்தமான தண்டனைகளை அதிகரித்தல், விலங்குத் தீனி உற்பத்தி மற்றும் விநியோகத்துறையை முறைப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்குரியதாக 1986 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க விலங்கு தீனிச் சட்டத்தைத் திருத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.