• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பல்கேரியாவுக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
- இலங்கையில் சுற்றுலாத் துறையில் நிலவும் அதிகரித்து வரும் கேள்வியை பரிசீலனை செய்யும் போது ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் விமான சேவைகளுக்கான உறவுகள் இலங்கையின் விமான சேவையினதும் சுற்றுலாத் துறையினதும் அபிவிருத்தியின் பொருட்டு அத்தியாவசியமானதென தெரியவருகின்றது. இதற்கமைவாக, இலங்கைக்கும் பல்கேரியாவுக்கும் இடையே உத்தியோகத்தர்கள் மட்டத்தில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள விமான சேவைகள் உடன்படிக்கையை தத்துவம் பெற்ற பிரதிநிதியொருவரினால் கைச்சாத்திடும் பொருட்டும் அதன் பின்னர் குறித்த உடன்படிக்கையை செயல்வலுவாக்கம் செய்யும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .