• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மற்றும் கல்வி இணை நிறுவனமொன்றைத் தாபித்தல்
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பணிகளிலும் ஏனைய மூன்றாம் நிலைக் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் சிறந்த முறையில் தாபிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமொன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞான ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வர்த்தக மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளைக் கொண்ட "உயர் ஆய்வு மற்றும் கல்வி இணை நிறுவனமொன்றை" தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் நாட்டின் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதோடு, தேசிய மற்றும் சருவதேச தரங்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் உட்பட்டு தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக செயலாற்றும் கேந்திர நிலையமொன்றாகவும் செயலாற்றும். இதற்கமைவாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மற்றும் கல்வி இணை நிறுவனமொன்றைத் தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.