• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
- இலங்கையின் சனத்தொகையில் 50% - 51% சதவீதத்திற்கு இடைப்பட்டோர் பெண்களாக இருந்த போதிலும், பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றின் மக்கள் பிரதிநிதிகளாக கடமையாற்றும் பெண்களின் எண்ணிக்கை இந்த நிறுவனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்படும் மொத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் சுமார் 5% சதவீதமாகும். உள்ளூராட்சி நிறுவனங்களினதும் மாகாண சபைகளினதும் பிரதிநிதித்துவத்தில் 25% சதவீதம் பெண்களுக்காக குறித்தொதுக்குவதாக கடந்த சனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் வழங்கப்பட்ட உறுதியுரைக்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.