• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் சட்டத்தை திருத்துதல்
- பொறுப்புவாய்ந்த கடற்றொழிலுக்காக சருவதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலான சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் பொருட்டு 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் சட்டத்தை திருத்தும் பொருட்டு 2015‑10‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.