• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவை இணைந்த நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி
- புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் ஏனைய நீர் தேவைகளை நிலக்கீழ் நீர்வளத்தினூடாக நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் என்பதோடு, சாதாரணமான உலர் காலநிலையிலும்கூட கடும் நீர்பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று இந்த பிரதேசத்தில் காணப்படும் நிலக்கீழ் நீர் திண்ம மற்றும் கணிம அளவு கூடியதாகவும் உள்ளது. இந்த நிலைமைக்கு மாற்றுவழியாக நாளொன்றுக்கு 11,000 கன மீற்றர் கொள்ளளவினைக் கொண்ட நவீன நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றையும் நீர் வழங்கல் முறைமையொன்றையும் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் ஆனமடுவை, கொட்டவெஹர. நவகத்தேகம, மஹாகும்புக்கடுவெல, முந்தளம், கல்கமுவ, ரஸ்நாயக்கபுர மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 81,700 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதிகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இயலுமாகும். இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதியுதவியளிக்கும் ஸ்பேன் அரசாங்கத்துடனும் இலங்கையிலுள்ள ஹட்டன் நெஷனல் வங்கியுடனும் வெவ்வேறு கடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.