• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் துறையில் புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்
- இந்தக் கருத்திட்டத்தின் கீழ் மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்டத்துறை மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பின் மூலம் வழங்கப்படும் கடன்களையும் நன்கொடைகளையும் பயன்படுத்தி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களிடமிருந்து இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடொன்று உரியதாகும் விதத்தில் 1,877 புதிய வீடுகள் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 1,260 வீடுகளின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் 617 வீடுகளின் வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. 7 பேர்ச்சஸ் காணியில் இரண்டு படுக்கை அறைகள், முகப்புக்கூடம், முன்விராந்தை, சமையல் அறை, வீட்டுடனான மலசல கூடம் ஆகியவற்றுடன் நிருமாணிக்கப்படும் இந்த வீடொன்று 550 சதுர அடிகளைக் கொண்டதாகும். தற்போது இந்த வீடொன்றுக்காக குறித்தொதுக்கப்படும் தொகையானது 515,000/- ரூபாவாவதோடு, இதில் 240,000/- ரூபா மீள அறவிடப்படாத கொடையொன்றாகவும் மீதி 275,000/- ரூபா கடன்தொகையாகவும் வழங்கப்படும். இந்தத் தொகையை 650,000/- ரூபாவாக திருத்துவதற்கும் கொடையொன்றாக வழங்கப்படும் தொகையை 310,000/- ரூபாவாகவும் கடன்தொகையை 340,000/- ரூபாவாகவும் அதிகரிப்பதற்காக மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .