• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையினுள் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் சகல மதுபான வகைகளுக்காகவும் புதிய பாதுகாப்பு அடையாள குறிப்புச் சீட்டு (ஸ்டிகர்) ஒன்றை அறிமுகப்படுத்துதல்
- அரசாங்கத்தினால் மதுபானம் மீது பாரிய அளவில் வரி அறவிடப்படுகின்றமையினால் வரிச் செலுத்துவதிலிருந்து தவறி சட்டவிரோதமாக கலந்து சந்தைக்கு அனுப்பப் படுகின்றன. இந்த நிலைமையின் கீழ் நுகர்வோர் மிக கேடு விளைவிக்கும் மதுபானங்களின் மீது நாட்டம் கொள்கின்றனர். அதேபோன்று வரி செலுத்தி உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் அதிக விலை காரணமாக சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகள் பதிலீடு செய்யப்படுவதனால் இது அரசாங்க வருமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், சட்டபூர்வமற்ற உற்பத்திகள் சந்தைக்கு வருவதனை தடுப்பதற்காக சுங்கத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் சட்டபூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான போத்தல்கள் ஒவ்வொன்றுக்கும் அடையாள குறிப்புச் சீட்டு (ஸ்டிகர்) ஒன்றை ஒட்டுவதற்கான வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதற்கும் சந்தைக்கு வருவதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் மதுமான வகைகளுக்கு சுங்க நடவடிக்கைகளின் போதே அடையாள குறிப்புச் சீட்டினை (ஸ்டிகர்) ஒட்டி உறுதிப்படுத்தும் சட்டத் தேவை பற்றி மதுபான இறக்குமதியாளர்களை அறியச் செய்விப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.