• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து 7 மில்லியன்ய யூரோக்கள் கொண்ட தொழினுட்ப ஒத்துழைப்பு மானியத்தைப் (Technical Cooperation Grant) பெற்றுக் கொள்தல்
- வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள அபாய தூரவரம்பு (Buffer Zone) முகாமைத்துவக் கருத்திட்டம், சமூக கூட்டிணைப்பிற்கான கல்விக் கருத்திட்டம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்திக் கருத்திட்டம் போன்ற மூன்று கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 7 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொழினுட்ப ஒத்துழைப்பு மானியமொன்றை வழங்குவதற்கு ஜேர்மன் பெடரல் குடியரசு உடன்பட்டுள்ளதோடு, அதற்காக இரண்டு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றல் பத்திரங்களை கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.