• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஒக்ரோபர் மாதம் 08 முதல் 11 வரை பேரு நாட்டின் லீமா நகரில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் / உலக வங்கியின் வருடாந்த கூட்டங்கள்
- தனது தலைமைத்துவத்தின் கீழ் பொதுத்திறைசேரியினதும் இலங்கை மத்திய வங்கியினதும் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்போந்த வருடாந்த கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் இந்த கூட்டங்களில் வளர்ந்துவரும் சந்தை மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு கூடிய கவனம் செலுத்தி உலக பொருளாதார எதிர்கால நோக்குபற்றி கலந்துரையாடியதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோன்று ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரத்தில் உற்பத்தித்துறையின் மெதுவான அபிவிருத்தி உட்பட பெரும்பாலான நாடுகள் முகங்கொடுத்துள்ள அரசியல் பிரச்சினைகள் போன்ற பிரதிகூலமான நிலைமைகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணங்களாக இனங்காணப்பட்டதெனவும் உலக பொருளாதார அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தினை விட குறைவாக உள்ளமையினால், இதன் மூலம் உருவாக்க கூடிய நிதி ரீதியிலான நிலையற்ற தன்மை, தொழில்வாய்ப்பின்மை, வருமான முரண்பாடுகள் போன்ற அபாயநிலைக்கு முகங்கொடுக்கும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கைகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளினால் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதெனவும் அமைச்சரினால் மேலும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், எமது வெளிநாட்டு வர்த்தகத்தின் முக்கிய தரப்பாக விளங்கும் நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் அதேபோன்று உலகவங்கி, சருவதேச நிதி நிறுவனம் போன்றவற்றின் சிரேட்ட உத்தியோகத்தர்களுடனும் பயனுள்ள கலந்துரையாடல்கள் பலவற்றை மேற்கொண்டதாகவும் நிதி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.