• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை - தாய்லாந்திற்கிடையிலான 60 வருட இராஜதந்திர உறவினை நினைவுகூரும் முகமாக முத்திரை வெளியிடுதல்
- இலங்கைக்கும் தாய்லாந்திற்குமிடையில் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 2015 ஆம் ஆண்டுடன் 60 வருடங்கள் நிறைவடைகின்றன. வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக இதன் நிமித்தம் இலங்கை அஞ்சல் திணைக்களமும் தாய்லாந்தின் அஞ்சல் நிறுவனமும் இரண்டு நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இரண்டு நாடுகளுக்கும் பொது விடயமொன்றான பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முத்திரைகள் வெளியிடப்படுவதோடு, இதன் மூலம் இருநாடுகளினதும் மக்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முத்திரை வெளியிடுதலானது இலங்கை சனாதிபதி அவர்களின் தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஒருங்கிணைவாக தாய்லாந்தின் அஞ்சல் நிறுவனத்தினால் 2015 நவெம்பர் மாதம் 02 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டதோடு, இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அது 2015 நவெம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ளது. இந்த நினைவு முத்திரைகள் வெளியிடுவதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களத்துக்கும் தாய்லாந்தின் அஞ்சல் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.