• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய கணக்கியல் உயர் டிப்ளோமா பாடநெறியை வர்த்தக விஞ்ஞான பட்டப் பாடநெறிக்கு மாற்று தகைமையொன்றாக கருதுதல்
- இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய கணக்கியல் உயர் டிப்ளோமா பாடநெறியை வர்த்தக விஞ்ஞான பட்டப் பாடநெறிக்கு மாற்று தகைமையொன்றாகக் கருதி 1990 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த 46/90 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையானது கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட இலக்கம் 10/2014 கொண்ட அரசாங்க நிருவாக சுற்றறிக்கையின் மூலம் நீக்கப்பட்டதன் காரணமாக இந்த பாடநெறியை கற்ற மாணவர்களுக்கு அரசாங்க துறையில் தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் போது பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு தனியார்துறை தொழில்வாய்ப்புகளின் போதும் இந்த டிப்ளோமாதாரர்களுக்கான தேவை குறைவடைந்தமையினால், இந்த பாடநெறியை கற்கும் மாணவர்களிடையே குழப்பநிலை உருவாகியுள்ளது.

க.பொ.த (உ/த) பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்காக தகைமைபெறும் சுமார் 142,000 மாணவர்களுக்கிடையே 23,500 பேர்கள் கொண்ட மிகக்குறைந்த மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றமையினால், உயர் பெறுபேறுகள் பெற்றிருந்தாலும் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காமல் போகும் வர்த்தக பாடங்களைக் கற்ற பெருமளவிலான மாணவர்கள் அவர்களுடைய பொருளாதார பின்னணிக்கு அமைவாக மேற்போந்த பாடநெறியை கற்பதற்கு வருடாந்தம் செல்கின்றனர். இது தொடர்பில் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2014‑04‑23 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்க வரத்தக்கதாக தேசிய கணக்கியல் உயர் டிப்ளோமா பாடநெறியை வர்த்தக விஞ்ஞான பட்டப் பாடநெறிக்கு மாற்று தகைமையொன்றாகக் கருதி வெளியிடப்பட்டிருந்த 46/90 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.