• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கப்பல்துறை நெய்யறி துணை நிலையத்தின் நிருமாணிப்பும் கெரவலபிட்டிய, திருகோணமலை, கட்டுநாயக்க நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தலும்
- பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கப்பல்துறை நெய்யறி துணை நிலையத்தின் நிருமாணிப்பு மற்றும் கெரவலபிட்டிய, திருகோணமலை, கட்டுநாயக்க நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தல் முதலியவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.