• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- மாத்தறை நகரத்திற்கு அண்மையில் வெல்லமடம பிரதேசத்திலுள்ள ருகுணு பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி நவீன பல்கலைக்கழகமொன்றில் காணக்கிடைக்கும் வசதிகளும் உள்ளவாறு பல்கலைக்கழக நகரமொன்றை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தின் கீழ் ருகுணு பல்கலைக்கழக நகரத்தையும் அதிலுள்ள பொதுவசதிகளையும் மேம்படுத்துவதற்கும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கூடமொன்றையும், நன்னீர் மீன் வளர்ப்புக் கூடமொன்றையும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் உபகருத்திட்டங்கள் இரண்டாக 2,512.8 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பிடப்பட்ட முதலீட்டின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேச முதலாவது துணைக் கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது:

* பல்கலைக்கழக நகர எல்லைகளை நிர்ணயித்து வெ ளிப்படுத்துதல்.

* கும்பல்கம வெவவையும், தெவுந்தரை களப்பையும், இணைக்கும் நீர்பாசன கால்வாய் ஒன்றை நிருமாணித்து ஒரு கரையில் நடைபாதையொன்றை நிருமாணித்தல்.

* பல்கலைக்கழக நகரகத்தில் நீச்சல் தடாகமொன்றை நிருமாணித்தலும் அதற்கு அண்மையில் விளையாட்டு மற்றும் களியாட்ட வசதிகளை அபிவிருத்தி செய்தலும்.

இதற்கமைவாக, ருகுணு பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழான முதலாவது துணைக் கருத்திட்டத்தை 556.6 மில்லியன் ரூபா முதலீ்ட்டில் செயற்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .