• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிய, பேராதனை பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்திலும் நிருமாணிக்கப்படும் கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுக்களின் சிபாரிசின் பிரகாரம் பின்வரும் ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் - 1,412.4 மில்லியன் ரூபா.

(ii) தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப துறையில் புதிய பட்டப் பாடநெறியொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு களனிப் பலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் தொழினுட்ப முகாமைத்து கல்வி பிரிவு சார்பில் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் ஒப்பந்தம் - 430.1 மில்லியன் ரூபா.

(iii) பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் - 342.3 மில்லியன் ரூபா.