• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிநுட்ப பாடங்கள் தொடர்பிலான பட்டப்பாடநெறிகள் சார்பில் பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- தொழிநுட்ப பாடவிதானத்தின் கீழ் முதற்தடவையாக உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு இடையில் பல்கலைக்கழக அனுமதிக்காக தகைமை பெறும் முதலாவது குழுவாக 1,800 மாணவர்களை 2016 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப் படவுள்ளனர். அதற்குத் தேவையான வசதிகளை பல்கலைக்கழகங்களில் உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக ரஜரட்ட, கொழும்பு, வடமேல், றுகுணு, ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் தேவையான கட்டடங்களை நிருமாணிப்பதற்காகவும் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவும் நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .