• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வொன்றாக அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர்தாங்கியிலிருந்து கொன்னொருவ வரை குழாய்கள் பதிக்கும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதகிரிய, காலியபுர, கெட்டன்வெவ, கொன்னொரு, அந்தரவெவ, குடா இந்திவெவ, ஹன்டில்ல ஆகிய பிரதேசங்களில் சுமார் 3,000 குடும்பங்களுக்கு உரிய 12,000 பேர்கள் இந்த பிரதேசத்தில் நிலவும் கடும் நீர் பிரச்சினை காரணமாக நீண்டகாலம் பல்வேறுபட்ட பொருளாதார, சுகாதார, சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதற்கு நிரந்தர தீர்வொன்றாக றுகுணுபுர நீர் கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர்தாங்கியிலிருந்து நீர் வழங்குவதற்கான முறைமையொன்றை நிருமாணிக்கும் முதலாம் கட்டமாக 465 மில்லியன் ரூபா செலவில் தற்போது 250 இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டத்தின் மூலம் நீர் வசதிகள் கிடைக்கப்பெறாத அதற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் நிலவும் கடும் நீர் பற்றாக்குறைக்கு தீர்வொன்றாக 214.93 மில்லியன் ரூபா செலவில் அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர்தாங்கியிலிருந்து மேலும் 2,818 இணைப்புகளைக் கொண்ட புதிய குழாய் முறைமையொன்றை நிருமாணிப்பதன் மூலம் 11,272 பேர்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் இந்தக் கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது