• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் எகிப்து நாட்டின் கமத்தொழில் மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையில் கமத்தொழில் மற்றும் அதுசார்ந்த துறைகளின் ஒத்துழைப்பு சார்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- எகிப்து வரண்ட காலநிலை வலயங்களைக் கொண்ட பயிர்செய்யக்கூடிய நிலஅளவு மிகக் குறைந்த நாடொன்றாக இருந்த போதிலும் கமத்தொழில் துறை அந்நாட்டின் முதன்மைத்துறையாக உள்ளது. ஆதலால், கமத்தொழில் துறையில் அவர்களினால் பயன்படுத்தப்படும் புதிய தொழினுட்பம், அறிவு எமது நாட்டின் உலர்வலய பிரதேசங்களில் கமத்தொழிலின் அபிவிருத்திக்குப் பொருத்தமானவாறு பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. இதற்கமைவாக பயிர் உற்பத்தி, உணவு தயாரித்தல், விளம்பரம், கமத்தொழில் உற்பத்திகளின் விற்பனை, கமத்தொழில் நடவடிக்கைகளுக்கான இயந்திய சாதனங்களின் பாவனை போன்ற துறைகளுக்குரியதாக தகவல்களையும் அனுபவத்தையும் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் எகிப்து நாட்டின் கமத்தொழில் மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.