• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார துறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்கள்
- சகல பிரசைகளுக்கும் அவர்களுடைய செலவு செய்யும் ஆற்றலைக் கருத்தில் கொள்ளாது சுதந்தரமான சுகாதார சேவையொன்றை வழங்குவதன் மூலம் பலம் மிக்க அபிவிருத்தியடைந்த பொது சுகாதார சேவை முறைமையொன்றை நாட்டில் தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு சேவைகள் 100 சதவீதமும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சேவைகளில் 90 சதவீதம் தொடக்கம் 95 சதவீதம் வரையும் வெளிநோயாளர் சிகிச்சை சேவைகளில் சுமார் 50 சதவீதமும் வழங்கப்படுவது பொது மக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் அரசாங்க துறைசார்ந்த சுகாதார சேவை நிறுவனங்களின் மூலமாகும். சுகாதார துறையை மேம்படுத்தும் பொருட்டு புதிய அரசாங்கத்தினால் உயர் கொள்கை ரீதியிலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதோடு, சுகாதார துறைசார்பில் 2015 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள தேறிய உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 1.8 சதவீதமான நிதி ஏற்பாடுகளுக்கு சமமாக 2016 ஆம் ஆண்டு சார்பில் தேறிய உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 3 சதவீதமான நிதி ஏற்பாடு ஒதுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக 2016 - 2018 நடுத்தவணை கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் சிகிச்சை சேவைகள், வைத்தியசாலை உதவிச் சேவைகள், நிபுணத்துவ மருத்துவ சேவை, மனிதவள அபிவிருத்தி, உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பவற்றிற்கு உதியதாக பல்வேறு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.