• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் எம்பிலிபிட்டிய டிப்போ அமைந்துள்ள இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு காணித் துண்டுகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- எம்பிலிபிட்டிய டிப்போ 1975 ஆம் ஆண்டில் ஆற்றுப்படுகை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான காணியில் தாபிக்கப்பட்டதோடு, இந்தக் காணியானது 1981 ஆம் ஆண்டில் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது. உரிய காணியின் உரிமை இதுவரை சட்டபூர்வமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்படவில்லை. இந்த டிப்போ அமைந்துள்ள இரண்டு காணித்துண்டுகளையும் இலங்கை போக்குவத்து சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.