• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானபீடத்திற்கான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானபீடம் 06 கல்வி பிரிவுகளைக் கொண்டு 2004 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்த பீடத்தில் சுமார் 425 மாணவர்கள் மருத்துவம், சத்திரசிகிச்சை மற்றும் தாதி விஞ்ஞானவியல் பட்டங்களுக்கான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பீடமானது நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து தற்காலிகமாகப் பெறப்பட்ட கட்டடமொன்றில் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த பீடத்திற்காக புதிய கட்டடத்தொகுதியெயான்றை நிருமாணிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக 47.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (6,617.5 மில்லியன் ரூபா) தேவைப்படுகின்றது. இந்த தொகையிலிருந்து 34 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் சலுகை கடன்தொகையொன்றாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.