• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துதல்
- 2015 பெப்ரவரி மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களில் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது அப்போதைய அமைச்சுக்களின் கீழாகும். ஆதலால், 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தாபிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கும் குறித்த அமைச்சுக்களின் கீழான திணைக்களங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தேவையான நிதி ஏற்பாடுகளை மீண்டும் குறித்தொதுக்குவதற்காக 2015 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டத்தை திருத்துவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.