• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 வரவு செலவுத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
- கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2016 வரவு செலவுத்திட்டத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டமானது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக பின்வருமாறு திருத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* 2016 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (முதலாம் வாசிப்பு) - 2015‑10‑23.

* வரவுசெலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு) - 2015‑11‑20.

* இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்திற்கு 2015‑11‑21 ஆம் திகதியிலிருந்து 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு - 2015‑12‑05.

* குழுநிலை விவாதத்திற்கு 2015‑12‑07 ஆம் திகதியிலிருந்து 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு - 2015‑12‑19.