• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்பு நோய்பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்
- இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்பு நோய்பிரிவின் ஊடாக நாளாந்தம் சிகிச்சை சேவைகளையும் நோயாளிகள் உபசரிப்பு சேவைகளையும் பெறுவதற்காக வருகைதரும் நோயாளிகளுக்கு உயர்மட்ட சுகாதார சேவையொன்றை வழங்கும் பொருட்டுத் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் முன்னுரிமை நோக்கமாகக் கருதி தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் பொருத்துவதற்குமாக சருவதேச போட்டி கேள்வி அழைக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.