• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்ப்புச்சக்தி குறைபாடுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான Human Immunoglobulin 5–6g கொண்ட 24,000 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- சருவதேச போட்டி கேள்வி கோரும் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கேள்விதாரர்களிலிருந்து நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரரிடமிருந்து எதிர்ப்புச்சக்தி குறைபாடுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான Human Immunoglobulin 5–6g கொண்ட 24,000 புட்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.