• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோதல் நிகழ்ந்த காலப்பகுதிக்குள்ளும் அதன் பின்னரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்புடைய சந்தேக நபர்களாக சிறையிலிடப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்
- மோதல் நிகழ்ந்த காலப்பகுதியின் இறுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த அத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் சுமார் 12,000 பேர்களிலிருந்து பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுடனான மிக சிறிய எண்ணிக்கையினர் தவிர ஏனைய சகலரும் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களின் மூலம் குற்றவாளிகளாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்கள், ஏற்கனவே குற்றச்சாட்டுப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ள அத்துடன் பகுதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அல்லது விசாரணைகள் இதுவரை முடிவுறாத ஆட்களும் குற்றச்சாட்டுப்பத்திரங்கள் கையளிக்கப்படாத போதிலும் சந்தேக நபர்களாக சிறையிலிடப்பட்டுள்ள ஆட்களும் மாத்திரம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இவர்கள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான சிபாரிசுகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவையினால் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.