• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதி நிருவாகத்தை பலப்படுத்தும் பொருட்டு புதிய கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
- நீதி நிருவாகத்திற்கான நீதிமன்ற முறைமையிலும் அதற்குரிய ஏனைய நிறுவனங்களிலும் தொடர்ந்தும் நிலவும் பிரச்சினைகளுக்கு நீண்டாகால தீர்வுகளை வழங்கும் நோக்கில் முழு நீதிமன்ற செயற்பாட்டினையும் தழுவும் விதத்தில் அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. வழக்குகளின் கால தாமதத்தை குறைத்தல் அதேபோன்று பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் தரத்தினை அதிகரித்தல் ஆகியன இதன்கீழ் எதிர்பார்க்கப்புகின்றது. இதற்கமைவாக, உத்தேச கருத்திட்டம் பின்வரும் ஐந்து (05) பிரதான துணை அம்சங்களின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

(i) நீதிமன்றங்களினதும் அதற்குரிய நிறுவனங்களினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்.

(ii) நீதிமன்ற செயற்பாட்டினை துரிதப்படுத்துவதற்கு வழக்குகளை முகாமிப்பதற்கான புதிய தொழினுட்ப கணனிமயப்படுத்தப்பட்ட முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்.

(iii) சட்ட மறுசீரமைப்பும் ஆராய்ச்சியும்.

(iv) நீதி நிருவாக செயற்பாட்டிற்கு சம்பந்தமான உத்தியோகத்தர்களின் பயிற்சியும் திறன் அபிவிருத்தியும்.

(v) நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கிரமமாக ஆய்வுகளைச் செய்தலும் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் நிரந்தர செயற்பாட்டுக் குழுவொன்றைத் தாபித்தலும்.

இந்தக் கருத்திட்டத்திற்கான மொத்த செலவு 14,681 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, தேவையான நிதியங்களை வெளிநாட்டு நிதியளிப்பு நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் திட்டமிடற் பணிகள் 2016 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.