• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளை மேம்படுத்துதல் - 2015
- நாடு பூராவும் வியாபித்துள்ள 1000 இற்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்தின் மருத்துவ சிகிச்சை சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு ஆரம்ப அவசர சிகிச்சை சேவைகளை வழங்குவதானது 1988 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் மிக நவீன சிகிச்சை சேவைகளின் வடிவமாக ஆரம்ப சிகிச்சைக்கூறினைத் தாபித்தலானது 1998 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வருடாந்தம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சேர்க்கப்படும் சுமார் 6 மில்லியன் நோயாளிகளில் 80 சதவீதமானவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளாவர். அத்துடன், வீதி விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்த விதத்தில் அவசர சிகிச்சை சேவைகளும்கூட முக்கியமாக முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகவும் கூடியளவில் அதிகரித்துள்ளது. மேற்போந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் கீழ் நிருவகிக்கப்படும் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 28 வைத்தியசாலைகளில் உரிய தரங்களுடனான அவசர சிகிச்சை சேவைகளுக்குத் தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், பயிற்சி பதவியணியுடன் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆறு (06) வருட காலத்திற்குள் வழங்குவதற்கும் அதற்காக 9,525 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஏற்பாடு செய்து கொள்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .