• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது இலங்கையில் அவசர பிணியாளர் வண்டி மருத்துவ பாதுகாப்பு சேவையொன்றை உருவாக்குதல்
- இந்தியாவில் நடைமுறையிலுள்ளவாறு அவசர பிணியாளர் வண்டி மருத்துவ பாதுகாப்பு சேவையொன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு 2015‑06‑24 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தின் முதலாவது கட்டம் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியம் ஒன்றை வழங்குவதற்கு மாண்புமிகு பிரதம அமைச்சரின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் இந்தியாவின் M/s.GVK Emergency Management and Research Institute நிறுவனத்துக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடு வதற்கும் கூட்டு கருத்திட்ட மேற்பார்வை குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.