• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திகன, விக்டோரிய / கொத்மலே கருத்திட்டத்தின் மாற்று வர்த்தக காணிகளுக்கு உறுதிகளை வழங்குதல்
- மகாவலி திட்டத்தின் கீழான விக்டோரியா நீர்த்தேக்க கருத்திட்டம், கொத்மலை நீர்த்தேக்க கருத்திட்டம், பொல்கொல்ல நீர்த்தேக்க கருத்திட்டம் ஆகியவற்றின் அபிவிருத்தி பணிகள் காரணமாக தொழில்முயற்சிகள் இல்லாமற் போனவர்களுக்கு புதிய அபிவிருத்தி பிரதேசங்களில் அதாவது கரல்லியத்த, ரஜவெல்ல, குண்டசாலை புதியநகரம், ஹாரகம, குருதெனிய, கொலொன்கஸ்வத்த, அம்பகொட்டோ / அளுத்வத்த, கொத்மலே புதிய நகரம், கட்டுகஸ்தொட்ட புதிய நகரம் ஆகியவற்றிலிருந்து மாற்று வர்த்தக கட்டடங்களுடனான காணிகளும் மாற்று வர்த்தக காணிகளும் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போது இந்த குத்தகைக்கால எல்லை முடிவடைந்துள்ளது. குறித்த தொழில்முயற்சிகளை நிலையான அடிப்படையில் நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் விதத்தில் இந்த ஆதனங்களின் சட்டபூர்வமான உரிமையாளர்கள் அனைவருக்கும் குத்தகை அடிப்படையில் குறித்த காணிகளை வழங்குவதற்குப் பதிலாக இந்தக் காணிகளின் மதிப்பிடப்பட்ட பெறுமதியினை அறிவிட்டுக் கொண்டு உறுதிகளை வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.