• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைந்திருந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் நிருமாணிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரணையை வழங்குதல்
- மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நாவுல, லக்கல - பள்ளேகம, மெதிரிகிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணி சுவீகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இதன் காரணமாக இந்தப் பிரதேசங்களில் அமைந்துள்ள 12 விகாரைகளை மீளக் குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் புதிதாக நிருமாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விகாரையொன்றுக்கு "சைத்திய", "போதிமளுவ", விகாரை, தானமண்டபம் மற்றும் பிக்குமார் வாசஸ்தலம் போன்வற்றை நிருமாணிப்பதற்காக 200,000/- ரூபா வழங்குவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை திருத்தி விகாரையொன்றுக்கு 1,500,000/- ரூபா வீதம் 12 விகாரைகள் சார்ப்பில் 18 மில்லியன் ரூபாவைக் கொண்ட பொருள் ரீதியிலான உதவிகளை மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.