• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் அமைப்பு, தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் உட்பட ஏனைய பல்புடை சுற்றாடல் சமவாயங்கள், மற்றும் நெறிமுறைகள் சார்பில் பங்களிப்புத் தொகைகளை செலுத்துதல்
- இலங்கை சுற்றாடல் பாதுகாப்புக்கு அதன் அர்ப்பணிப்பினை வெளிக்காட்டி பல்வேறுபட்ட ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய பல்புடை சுற்றாடல் சமவாயங்களுக்கும் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த உடன்பாட்டுக்கு அமைவாக சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலான அறிவினை வளர்த்தல், விடயம் சார்ந்த ஆற்றல் விருத்தி, சுற்றாடல் பாதுகாப்புக்கு கொடைகளாக கிடைக்கும் சருவதேச தொழினுட்ப, நிதி ஒத்துழைப்பு மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி போன்ற நலன்கள் எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்கு முடிந்துள்ளது. இந்த உடன்பாடுகளுக்கு அமைவாக, இலங்கையினால் வருடாந்தம் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகையை செலுத்தும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.