• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு வலயத்தைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவ உத்தியோகத்தர்களுக்கும் / ஏனைய தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் பாடநெறிகளை பயில்வதற்கு வாய்ப்பு வழங்குதல்
- பாதுகாப்பு அமைச்சினால் நிருவகிக்கப்படும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழக சங்கத்தில் முழுமையான உறுப்புரிமையை கொண்ட பல்கலைக்கழகமொன்றாகும். இதன் மூலம் ஆபிரிக்க மற்றும் ஆசிய வலயங்களிலுள்ள நாடுகளுடனான நட்புறவையும் இராஜதந்திர மட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பினையும் மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு இராணுவ உத்தியோகத்தர்கள் / பயிலிளவல் உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய மாணவர்களுக்காக பட்டப்பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ருவண்டா, நைஜீரியா, சம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பயிலிளவல் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் இங்கு கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சருவதேச ரீதியில் நிலவும் போட்டி, கேள்வி, ஈர்ப்பு ஆகியவற்றின் மீது ரோயல் ஓமான் கடற்படையின் தொழினுட்பவியலர்கள் குழுவொன்றுக்கு பயிற்சி வழங்குமாறு கிடைக்கப் பெற்றுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்த குழுவை இலங்கை கடற்படையின் உதவியுடன் பயிற்சியளிப்பதற்கும் மத்திய கிழக்கு, ஆபிரிக்க மற்றும் ஏனைய வலயங்களிலுள்ள நாடுகளுடன் நிலவும் நட்புறவினையும் ஒத்துழைப்பினையும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்குடன் எதிர்காலத்தில் இந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக விசேட பாடநெறிகளை நடாத்துவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.