• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
- பதில் நிதி அமைச்சர் லக்ஸ்மன் யப்பா அபேவர்த்தன அவர்களினால் 2016 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவுசெலவுத்திட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறாகும்:

(i) 2016 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (முதலாம் வாசிப்பு) - 2015‑10‑23.

(ii) வரவுசெலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரணடாம் வாசிப்பு) - 2015‑11‑20.

(iii) இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் (14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது).

(iv) இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு - 2015‑12‑08.

(v) குழுநிலை விவாதம் (12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது).

(vi) வரவுசெலவுத்திட்டத்தின் மீதான மூன்றாம் வாசிப்பு (வாக்கெடுப்பு) - 2015‑12‑22.