• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மத்திய மாகாணத்தில் ஒன்பது (9) சிவில் வேலை ஒப்பந்த பொதிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அங்கீகாரம் கோரல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மத்திய மாகாண வீதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கண்டி மாவட்டத்தின் கிராமிய வீதிகள் 222 கிலோ மீற்றர்களும் நுவரெலியா மாவட்டத்தில் கிராமிய வீதிகள் 181 கிலோ மீற்றர்களும் மாத்தளை மாவட்டத்தில் கிராமிய வீதிகள் 195 கிலோ மீற்றர்களும் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.