• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலான சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனைகளை அதிகரித்தல்
- சருவதேச கடற்றொழில் சட்டங்களுக்கு அமைவாக இலங்கை கடற்றொழிலாளர்கள் செயலாற்றாததன் காரணமாக இலங்கை மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2015 சனவரி மாதத்திலிருந்து விதிக்கப்பட்டிருந்ததோடு, இந்த தடையை நீக்கிக் கொள்வதற்காக செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. சருவதேச கடலில் கடற்றொழில் பணிகளின் போது செய்யப்படும் குற்றங்களுக்காக தற்போது வழங்கப்படும் தண்டனைகளை சருவதேச இணக்கப்பாடுகளுக்கு அமைவாக சீர்செய்வதற்கும், குற்றம் புரியப்படும் சந்தர்ப்பத்திலேயே பிடிக்கப்பட்டுள்ள மீன்களின் அளவையும் படகுகளின் நீளத்தையும் அகலத்தையும் அடிப்படையாகக் கொண்டு தண்டனைகளை தீர்மானிப்பதற்கும் மீன் உற்பத்திகளின் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்குரிய குற்றங்கள் உரிய மீன்களின் அளவுக்கான பெறுமதியின் ஐந்து மடங்காகும் விதத்தில் அதிகரிப்பதற்கும் ஏற்கனவே கடற்றொழில் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத நிருவாக ரீதியிலான தண்டனைகளை வழங்கும் வழிமுறையினை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் மூலம் இலங்கையில் மிக பொறுப்புக் கூறத்தக்கதும் சுற்றாடல் நட்புறவுமிக்கதுமான கடற்றொழில் கலாசாரமொன்றை உருவாக்கும் பொருட்டும் 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரகவள சட்டத்தை திருத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.