• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொறியியல் தொழில்சார்பாளர்களை பதிவு செய்வதன் மூலம் இலங்கையில் பொறியியலாளர்களின் தொழிலில் ஈடுபடுதலை ஒழுங்குறுத்துவதற்காக பொறியியல் சபையொன்றை நிறுவுதல்
- தேவையான தகைமைகளைக் கொண்டுள்ள பொறியியல் தொழில்சார்பாளர்களை பதிவு செய்தல் பொறியியலாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடக்கப்பட்ட தரவு முறைமையொன்றைப் பேணுதல், காலத்திற்கு காலம் அதனை பிரசித்தப்படுத்தல், பொறியியல் தொழில்சார்பாளர்களுக்குரிய ஏனைய விடயங்கள் சம்பந்தமாக ஒழுங்குறுத்துதல், தொழிலுக்குரிய தரங்களை அமுல்படுத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக பொறியியல் சபையொன்றை தாபிக்கும் பொருட்டு பலவருடங்களாக உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .