• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து கம்பனி ஆகியவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல்
- வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து கம்பனி ஆகிய நிறுவனங்கள் அவற்றின் பணிகளை வர்த்தக ரீதியில் இலாபகரமாக நடாத்திச் செல்வதற்கு தவறியுள்ளமையினால், அவற்றில் சேவைபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் அன்றாட பணிகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளுக்காகவும் செலவுகளை ஏற்கமுடியாமல் உள்ளமையினால் பிரச்சினை மிகுந்த நிலைக்கு ஆளாகியுள்ளதென கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சினால் இந்த நிறுவனங்களை மீளமைக்கும் பொருட்டு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டமொன்று துரிதமாக தயாரிக்கப்படுவதற்கு உட்பட்டு, இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நடப்பாண்டில் திசெம்பர் மாதம் வரை சம்பளம் வழங்குவதற்குத் தேவையான நிதியை பொதுத்திறைசேரியினால் வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.