• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆதிவாசிகளின் அபிவிருத்திக்காக தம்பானை மரபுரிமை நிலையத்தை புனரமைத்தலும் அதன் பணிகளை பேணுவதற்காக மாதாந்தக் கொடையொன்றை வழங்குதலும்
- ஆதிவாசி மக்களின் அடையாளத்தையும் அவர்களுடைய நிலையான வாழ்க்கைக்கு அரசாங்கத்தின் அனுசரணை தேவையென்பது கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுடைய வழமையான வாழ்வாதாரத்தின்பால் பாதிக்கும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதற்காக ஆதிவாசிகளின் மரபுரிமை நிலையத்திற்கு ஏற்கனவே மாதாந்தம் வழங்கப்படும் 100,000/- இலட்சம் ரூபாவை 125,000/- இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .