• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயளவை தகவல்கள் கொண்ட தனிநபர் தரவு முறைமையொன்றைத் தாபித்தலும் இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்துதல்
- தற்போது ஆட்களைப் பதிவு செய்தவற்கும் ஆள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் வழிமுறைகளுக்கும் தொழினுட்பத்திற்கும் பதிலாக உலகில் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழினுட்ப வழிமுறைகளை பயன்படுத்தி தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான பாதுகாப்பான இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்கும் பொருட்டு 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.