• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் செயற்பாடு பற்றிய ஆய்வு - 2015/2016
- இலங்கையில் சிறுவர்களை தொழிக்கு அமர்த்தும் நிலைமையை மதிப்பிடுவதற்காக சிறுவர்கள் சம்பந்தமான சகல செயற்பாடுகளும் தொடர்பிலான தகவல்களை சேகரிப்பதற்காக 1999 ஆம் ஆண்டிலும் 2008 / 2009 ஆம் ஆண்டிலும் சிறுவர் செயற்பாடு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 / 2016 சிறுவர் செயற்பாடு தொடர்பிலான ஆய்வினை செய்வதன் மூலம் ஐந்து (05) வயதுக்கும் பதினேழு (17) வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளின் சமூக, கல்வி, பொருளாதார செயற்பாடுகள், வீடுகளில் அன்றாட பணிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான தகவல்கள் என்பனவற்றையும் அதேபோன்று சிறுவர்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பிலான பெற்றோர்களின் கருத்து போன்ற தகவல்களும் ஒன்று திரட்டப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்த ஆய்வில் விசேட தேவைகளைக் கொண்ட (வலது குறைந்த) சிறுவர்களின் செயற்பாடுகள், சிறுவர் இல்லங்களிலும் காப்பு நிலையங்களிலுமுள்ள சிறுவர்கள் உட்பட வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகள் பற்றிய தகவல்களும் ஆராயப்படவுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை 26,123,469 ரூபாவாகுமென்பதோடு, இதனை கொடையொன்றாக வழங்குவதற்கு சருவதேச தொழில் அமைப்பு உடன்பாடு தெரிவித்துள்ளது. தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் இந்த ஆய்வினை நடாத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.