• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1983 கலவரத்தின் போது இடம்பெயர்ந்த தற்போது மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான விக்டோரியா பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு காணிகளையும் வீடுகளையும் வழங்குதல்
- திகன, ரஜவெல்லையில் வசித்து 1983 கலவரத்தின் போது இடம்பெயர்ந்த 134 குடும்பங்கள் அரசசார்பற்ற அமைப்புகளினால் அம்பகொட்டே குடியேற்றத்தில் லயன்வீடுகளை நிருமாணித்து குடியமர்த்தியுள்ளது. மிககுறைந்த வசதிகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிகளுடன் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த வீடுகளில் குடியமர்ந்துள்ளவர்களுக்கு இந்த வீடுகளுக்கோ அல்லது காணிகளுக்கோ எந்தவித சட்டபூர்வமான உரிமையும் இல்லாததன் காரணமாக நீர், மின்சாரம் போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும்கூட இல்லாமற் போயுள்ளது. இந்தக் குடும்பங்களின் இரண்டாவது பரம்பரையின் 146 குடும்பங்களுக்கு அம்பகொட்டே பிரதேசத்தின் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மேற்குறிப்பிட்ட 134 குடும்பங்களையும் இந்தக் காணித் துண்டுகளுக்கு அண்மையில் குடியமர்த்துவதற்கான பணிகளை மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.