• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
- இலங்கையில் நிலைபேறுடைய சுற்றாடலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டமொன்று இயைபுள்ள சகல நிறுவனங்களினதும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் பின்வருமாறு பிரதான சுற்றாடல் பிரச்சினைகளுக்கு மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

(i) சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்தல்

* "நிக்கசல லங்கா" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டளவில் முறையான கழிவு முகாமைத்துவத்துடனான நாடொன்றை உருவாக்குதல்.

* "நிக்கசல புரவர" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகார பிரதேசங்களின் கழிவு முகாமைத்துவம்.

* "ஹரித்த வெரல" நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலங்கை கரையோர பிரதேசத்தின் 15 கிலோ மீற்றர் பசுமை கரையோர பகுதியொன்றைத் தாபித்தல்.

* "சுனில சயுர" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டளவில் நாட்டைச் சுற்றியுள்ள சமுத்திரத்தை மாசற்ற வலயமாக மாற்றியமைத்தல்.

* "சுத்தமான காற்று - நீண்ட ஆயுள்" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் மாசற்ற வளிமண்டலத்தை உருவாக்குதல்.

* "வாழ்க்கையைக் காக்கும் - நீர் பாதுகாப்பு" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சகலருக்கும் சுத்தமான நீர் வழங்குதல்.

(ii) வனப் பாதுகாப்பும் அபிவிருத்தியும்

* "வனரோப்பா" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 6,000 ஹெக்டயரால் வன அளவினை அதிகரித்தல்.

* "வன அரன ரக்கவரண" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 6,000 கிலோ மீற்றர் / 25,000 ஹெக்டயார் வனம் அளக்கப்பட்டு குறியீடு செய்தலும் அவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தலும்.

* "வன சரண" நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சுற்றாடல் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்.

(iii) நிலையான காணி முகாமைத்துவம்

* "ஹாயன - சாயன" நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலங்கையில் மண் அரிப்பினையும் நில அரிப்பினையும் தடுத்தல்.

* "சேம பூமி" நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்த்தின் மூலம் நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாத்தல்.

* "சார நகர" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 05 காலநிலை நட்புறவு நகரங்களைத் தாபித்தல்.

* காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய விதத்தில் "காலநிலை மாற்ற கிராமங்கள்" 50 இனை இலங்கை முழுவதும் தாபித்தல்.

(iv) காட்டு மிருகங்கள் - மனிதர்கள் சார்ந்த பிரச்சினை

* மனிதர்களுக்கு காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளற்ற வலயங்களை நிருமாணிக்கும் பொருட்டு "ஜனவரன - ரக்கவரன" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

(v) உயிரினப் பல்வகைமை வளங்களை பாதுகாத்தல்

* "ஜைவ சம்பத் ஹரன - வாரன" நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் உயிரனப் பல்வகைமை கொள்ளையைத் கட்டுப்படுத்தல்.

* "வனஜீவி புனர்ஜனன" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அழிந்துபோகும் நிலைக்கு ஆளாகியுள்ள ஐந்து (05) விசேட வனவுயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

(vi) சுற்றாடல் பாதுகாப்பிற்குரிய நிறுவனங்களை மீளமைத்தல்

* இலங்கையில் சகல மாவட்டங்களையும் / பிரதேச செயலகப் பிரிவுகளையும் / கிராமங்களையும் தழுவும் விதத்தில் "சுற்றாடல் அதிகாரக் குழுக்களை" தாபித்தல்.

* "சுற்றாடல் பொலிஸ்" என்பதை பலப்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையைத் தாபித்தல்.

* சுற்றாடல் பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் அத்துடன் அவற்றுக்கு தீர்வுகளை காணும் போது மக்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்தல் முதலியவற்றை நோக்காகக் கொண்டு "ஜன ஹன்டஹரய" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

இந்த மூன்றுவருட கால நிகழ்ச்சித்திட்டத்திற்கு 22,547 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதோடு, இதனை 2015 ஒக்ரோபர் மாதத்திலிருந்து ஆரம்பித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.