• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி, வீடு மற்றும் குடியிருப்பொன்றின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் புதிய மாதிரிக் கிராம வேலைத்திட்டம்
- தற்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தியுள்ள பங்களிப்பு அபிவிருத்தியினை முதன்மையாகக் கொண்ட “சகலருக்கும் இருப்பிடம்” என்னும் வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடுகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட தொகையில் தங்களுடைய உழைப்பினையும் சேமிப்பினையும் சேர்த்து பெறுமதிகூடிய வீடொன்றை குறுகிய காலப்பகுதிக்குள் நிருமாணிக்க இயலுமானது. ஆயினும், இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வீடுகளை நிருமாணிப்பதற்கு இயலாமற்போன பல குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கின்றன. இவர்கள் அனைவரினதும் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து வீட்டினதும் காணியினதும் உரிமையுடன் குடியிருப்பொன்றில் தங்களுடைய வாழ்க்கையைக் கழிக்கும் சந்தர்ப்பத்தினை வழங்கும் நோக்கில் புதிய மாதிரிக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவற்கு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 38 வீடமைப்புக் கருத்திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒரு கருத்திட்டத்தின் கீழ் 25 வீடுகளை நிருமாணிப்பதற்கும் வீடொன்றுக்கு 250,000/= ரூபாவைக் கொண்ட சலுகைக் கடன் தொகையொன்றை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதோடு, மொத்த நிகழ்ச்சித்திட்டம் சார்பில் 240 மில்லியன் ரூபா செலவிடப்படுவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. .