• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் பழுதுபார்த்தல் வேலைகளுக் காக குறித்த நீதிமன்றங்களை வேறு இடத்தில் தாபிப்பதற்காக தற்காலிக கட்டடங்களை நிருமாணித்தல்
- பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிருமாணிக்கப்பட்ட கொழும்பு புதுக்கடையிலுள்ள மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 08 மேல் நீதி மன்றங்களும் 03 வர்த்தக மேல் நீதிமன்றங்களும் 08 மாவட்ட நீதி மன்றங்களும் தாபிக்கப்பட்டுள்ளதோடு, உரிய கட்டடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் அவற்றை துரிதமாக பழுதுபார்த்தல் அத்தியாவசியமானதாகும். இந்த பழுபார்த்தல் வேலைகள் மேற்கொள்ளப்படும் காலப் பகுதிக்குள் இந்தக் கட்டடத்தொகுதியில் நடாத்திச் செல்லப்படும் நீதி மன்றங்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல நேரிட்டுள்ளது. இதற்காக பீ.சீ.சீ. லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் 04 முன்வார்ப்புக் கட்டடங்கள் இலங்கை தரைப்படையினால் நிருமாணிக்கப்பட்டுள்ளதோடு, மேல் நீதி மன்றங்களையும் மாவட்ட நீதி மன்றங்களையும் கொண்டு செல்கையில் அதற்குத் தேவையான ஏனைய வசதிகளான நீர், மின்சாரம், கழிவு கால்வாய் முறைமைகள், உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான மலசலகூட வசதிகள், வாகனத்தரிப்பிடங்கள், நுழைவாயில் , சிறைச்சாலைக் கைதிகளை தடுத்து வைப்பதற்கான இடங்கள், பதிவாளர் அலுவலகம், ஆவண காப்பகம் வழக்குப்பொருட்கள் வைக்கும் இடங்கள், பாதுகாப்புக்கூடங்கள் போன்றவை நிருமாணிக்கப்பட வேண்டியுள்ளன. இந்த நோக்கத்தை இலங்கைத் தரைப்படையின் பொறியியல் பிரிவின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்காக 87.7 மில்லியன் ரூபாவை செலவு செய்வதற்கும் நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.