• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
- 2016 நிதியாண்டில் ஏற்பாடு செய்யக்கூடிய மொத்த வளங்களின் அளவு, அரசாங்க கொள்கை மற்றும் முன்னுரிமையினை அடிப்படையாகக் கொண்டு அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் ஏனைய உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி 2016 ஆம் ஆண்டிற்கான வருமான மற்றும் செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 3,138 பில்லியன் ரூபாவாகுமென்பதோடு, மதிப்பிடப்பட்ட வருமானம் வெளிநாட்டு மானியம் அடங்கலாக 1,789 பில்லியன் ரூபாவாகும். இதற்கமைவாக, 2016 நிதியாண்டு சார்பில் அரசாங்கத்தின் சேவைகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.