• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை பாதிப்புகளை குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளில் மண்சரிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கான ஆலோசனை சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம்
- உலக வங்கியின் முகவராண்மையொன்றான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தினால் நிதியளிக்கப்படும் காலநிலை பாதிப்புகளை குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் மண்சரிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளல், திட்டமிடுதல் உட்பட நிருமாணிப்பு மேற்பார்வையின் பொருட்டிலான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 146.17 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப் பட்ட தொகைக்கு தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .